1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cuddalore collector warning in kanagasabai issue

கனகசபையில் பக்தர்கள் அனுமதி: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

chidambaram
கனகசபையில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டதை அடுத்து இதை வைத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடுவது குறித்த தமிழக அரசின் உத்தரவு கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் உறுதி அளித்துள்ளார் 
 
மேலும் தீட்சதர்களை கேட்காமலேயே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசின் உத்தரவை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த நினைக்க வேண்டாம் என்றும் அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
 
அடுத்த கட்டுரையில்
இந்தியா இலங்கை போலவே உள்ளது..! – ராகுல்காந்தி பதிவிட்ட மேப்!