1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Southern railway says chennai electrict trains runs

சென்னையில் புறநகர் ரயில்கள் இன்று இயங்குமா? தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை
சென்னையில் தொடர் கனமழை பெய்து வருவதையடுத்து புறநகர் ரயில்கள் இயங்குமா என்பது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே சற்றுமுன் வெளியிட்டுள்ளது
 
சென்னையில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் ஒரே நாளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கன மழை காரணமாக புறநகர் ரயில் இயக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே புறநகர் ரயில்களில் பயணம் செய்யும்போது மக்கள் தாராளமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கனமழை எதிரொலி: சென்னையில் 6 சுரங்கப்பாதை மூடப்பட்டது