1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Next five days heavy rain in chennai

அடுத்த 5 நாட்களுக்கு சென்னையில் கனமழை: வானிலை அறிவிப்பு!

சென்னை
சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார்
 
மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்த கனமழை நீடிக்கும்
 
அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
ஏற்கனவே சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!