1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijayakanth advise to his party members

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்… கட்சியினருக்கு விஜயகாந்த் வேண்டுகோள்!

சென்னை
சென்னையில் பெய்து வரும் பெருமழையால் முழு நகரமும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று காலை முதல் தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மழை நீர் வடியாமல் பல இடங்களில் வெள்ளக் காடாக மாறியுள்ளது.

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேமுதிகவினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
காதல் விவகாரம்…. 17 வயது சிறுவன் அடித்துக் கொலை!