ராகவேந்திரா மண்டபம் அவ்ளோதான்!.. ஷாக் கொடுத்த சவுந்தர்யா ரஜினிகாந்த்..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இருக்கிறது. 1989ம் வருடம் இந்த மண்டபம் துவங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாகவே அந்த திருமண மண்டபம் செயல்பட்டுவந்தது.
ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, அரசியல் தொடர்பான விவாதங்களை செய்தது, தனக்கு நெருக்கமான நண்பர்களை சந்தித்தது என எல்லாமே அந்த திருமண மண்டபத்தில்தான். ஆனால் அந்த மண்டபத்தை இடித்துவிட்டு அங்கு ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டல் வரப்போகிறது என கடந்த சில நாட்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது அந்த செய்தி உண்மைதான் என்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய ரஜினியின் மகள் சௌந்தர்யா ராகவேந்திரா திருமண மண்டபம் வேறு பயன்பாட்டிற்கு விரைவில் மாற்றப்படவிருக்கிறது.. 35 வருடமாக திருமண மண்டமாக இருந்த நிலையில் இனிமேல் அது அப்படி செயல்படாது.. அதன் அடுத்த பரிணாமம் குறித்து தகுந்த நேரத்தில் அறிவிப்போம்’ என கூறியிருக்கிறார்.