தொடர்புடைய செய்திகள்
- நேரடி இலவச தரிசனம் ரத்து: திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!
- ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு! ரயில்கள் நின்று செல்லும்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
- 23ம் தேதி திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு! – 4.23 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் தயார்!
- திருமண வரவேற்பில் சிலிண்டர் வெடித்து சிறுமி பலி
- ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர் தாக்கப்பட்ட விவகாரத்தில் சுமூக தீர்வு: அமைச்சர் சேகர்பாபு
ஸ்ரீரங்கம், திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. விண்ணை முட்டிய பக்தர்களின் ‘கோவிந்தா’ கரகோஷம்..!
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு இன்று ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் ஏராளமானோர் சொர்க்கவாசல் வழியாக கோவிந்தா கோவிந்தா கரகோஷமிட்டு சென்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
இன்று அதிகாலை 1.40 மணிக்கு ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு ஏழுமலையான் எழுந்தருளினார். சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Edited by siva
