வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2023 (17:03 IST)

நேரடி இலவச தரிசனம் ரத்து: திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!

tirupathi
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தரிசன டோக்கன், 300 ரூபாய் டோக்கன், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் உடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி கிடைக்கும் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே காத்திருப்பு மண்டபங்களில் இருக்கும் 32 அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிவதால் புதிதாக நேரடி இலவச தரிசன செய்ய பக்தர்களை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்

இதனை அடுத்து பக்தர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு புரிய வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. திருப்பதியில் திடீரென பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran