1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (09:57 IST)

23ம் தேதி திருப்பதி சொர்க்கவாசல் திறப்பு! – 4.23 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் தயார்!

tirupathi
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்வாக சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ள நிலையில் 4.23 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.



மார்கழி மாதத்தில் திருப்பதியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவில் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் 23ம் தேதியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. சொர்க்கவாசல் தரிசனம் செய்பவர்கள் மறுமையில் சொர்க்கத்தை அடைவார்கள் என்பது ஐதீகம்.

டிசம்பர் 23ம் தேதி நடைபெற உள்ள சொர்க்கவாசல் திறப்பிற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் 4.23 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி பேசியபோது “திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் டிசம்பர் 23 அதிகாலை 1.45 மணிக்கு திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சொர்க்கவாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

டிசம்பர் 22ம் தேதி மதியம் 2 மணி முதல் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாஸம், சீனிவாசம் தங்கும் விடுதிகள், திருப்பதி கோவிந்தராஜசாமி சத்திரம், பூதேவி காம்ப்ளக்ஸ், ராமச்சந்திரா புஷ்கரணி, ஜீவகோணா பள்ளி வளாகம், ஜில்லா பரிஷத் பள்ளி வளாகம், எம்.ஆர்.பள்ளி வளாகம், இந்திரா மைதானம் ஆகிய 9 இடங்களில் உள்ள 90 கவுண்ட்டர்கள் மூலமாக 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K