1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. some storis about whistle of tvk

தவெகவுக்கு விசில் சின்னம்!.. விசில் சின்னமும்... சில தகவல்களும்!..

vijay
விஜய் துவங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. விசில், கால்பந்து, கிரிக்கெட் பேட், ஹெல்மெட் உள்ளிட்ட 10 சின்னங்களை குறிப்பிட்டு இதில் ஏதேனும் ஒன்றை கொடுங்கள் என்று தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

அதில் முன்னுரிமையாக விசில் சின்னத்தை அளிக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கை தற்போது தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டு அந்த கட்சிக்கு விசில் சின்னமே வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், விசில்
சின்னம் தொடர்பான சில செய்திகளை பார்ப்போம்.

விசில் சின்னம் தமிழக சட்டசபை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் பலமுறை சுயேட்சை வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது காமெடி நடிகர் மயில்சாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் கூட விசில் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர்.

இதுவரை விசில் சின்னம் சிகிச்சை வேட்பாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டசபை தேர்தல் மட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தலிலும் அதிகம் பயன்படுத்தப்பட்ட சின்னமாக விசில் இருக்கிறது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜெயபிரகாஷ் நாராயணன் 2009ம்  வருடம் தேசிய அளவில் தொடங்கிய லோக்சபா கட்சியின் சின்னம் விசில்.

ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை Whistle Blowers என அழைப்பதுண்டு.
ஆம் ஆத்மி கட்சி கூட தேர்தல் அரசியலுக்கு செல்வதற்கு முன் இயக்கமாக இருந்தபோது விசில் சின்னத்தை அதிகம் பயன்படுத்தியது.

தவெக தலைவரின் பெயர் விஜய். அவரின் முதல் எழுத்து ‘வி’. அதேபோல் வெற்றியின் ஆங்கில எழுத்து Victory. அதன் முதல் எழுத்து V.. எனவே செண்டிமெண்டாகவே விஜய்க்கும், தவெகவுக்கும் விசில் சின்னம் பொருத்தமாக அமைந்திருக்கிறது..
அடுத்த கட்டுரையில்
ஆண்கள் டாய்லெட்டுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி.. 20 நிமிடத்தில் குற்றவாளி கைது..!