1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Smart meter will soon says minister senthil balaji

மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் முறை: அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்கணக்கீடு
மின் கணக்கீடு செய்ய ஸ்மார்ட் மீட்டர் முறை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் 
 
மின் கணக்கீடு செய்ய முறையில் டிஜிட்டல் மீட்டரிலிருந்து ஸ்மார்ட் மீட்டருக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் மின் வாரியத்தில் ஏற்பட்ட 900 கோடி இழப்பை சரிசெய்ய ஸ்மார்ட் மீட்டர் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்
 
மேலும் மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய ஆய்வு செய்த சீர்திருத்தங்கள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக மின் பராமரிப்பு பணிகள் இல்லாமல் இருந்த நிலையில் பத்தே நாட்களில் திமுக அரசு பராமரிப்பு செய்து சாதனை செய்து உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் மாற்றிவிட்டால் மின் நுகர்வோர்களுக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கும் வேலைப்பளு குறையும் என்பதும் ஆன்லைன் மூலமே மின்சார கணக்கெடுப்பு மற்றும் மின்சார கட்டணம் செலுத்தி கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை- வானிலை மையம்