1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (07:02 IST)

பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர், மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறை: விரைவில் அமல்

பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர், மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறை: விரைவில் அமல்
நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு பிரீபெய்டு முறையில் மின்சார கட்டணம் செலுத்தலாம் என்ற முறை விரைவில் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
செல்போனில் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது போல் இனி மின்சார கட்டணத்தையும் அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து, ரீசார்ஜ் தொகைக்கு ஏற்ப மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற முறை அமலுக்கு வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் 25 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்ததும் பிரீபெய்டு முறையில் மின்சார பயன்பாட்டை நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சரவை கூறியுள்ளது
 
இந்த முறை அமலுக்கு வந்தால் ரீடிங் எடுப்பது, மின்கட்டணம் மின்அலுவலகம் சென்று செலுத்துவது உள்பட எந்த பணியும் இருக்காது என்றும் ஆன்லைன் மூலமே அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து, ரீசார்ஜ் தொகைக்கு ஏற்ப நாம் மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது