தொடர்புடைய செய்திகள்
- அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச கபசுர குடிநீர் பேக்கெட்??
- இந்திய அளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 3வது இடம்
- நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு வாழ்த்து....டிவிட்டர் ஸ்பேஸில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்…
- கல்வி டி.வி பாட விவரம் - முன் கூட்டியே தெரியப்படுத்த உத்தரவு
- கொரோனா பாதிப்பு குறைந்ததாள் 2வது அலை ஒஉந்தது என்றில்லை..
#அணில்தான்_காரணம்... நக்கலுக்கு உள்ளான செந்தில் பாலாஜியின் பேச்சு!!
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #அணில்தான்_காரணம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தினம்தோறும் சில மணி நேரங்கள் மின்தடை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மின்தடை குறித்து சமீபத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த சில மாதங்களாக மின்வாரிய பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்துள்ளதாலும், அணில்கள் ஓடுவதாலும் மின்தடை ஏற்படுகிறது என கூறியிருந்தார்.
இந்நிலையில், இதனை கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளமான டிவிட்டரில் #அணில்தான்_காரணம் என்ற ஹேஷ்டேக்கும் #அணில்பாலாஜி என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
