1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sivakasi cracker manufacturing house blast

சிவகாசியில் பயங்கர வெடிவிபத்து; 3 மாடி கட்டிடம் சரிந்தது!

Tamilnadu
சிவகாசியில் பட்டாசு குழாய் தயாரித்து வந்த வீட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் ரிசர்வ் லைன் நேருஜி நகரில் உள்ள 3 அடுக்கு மாடி வீடு ஒன்றை மதுரையை சேர்ந்த ராமநாதன் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த வீட்டில் பட்டாசு மூலப்பொருளான ரசாயன குழாய்கள் தயாரிக்கும் பணியை இவர் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்தது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்துள்ளனர். அந்த கட்டிடத்தில் பணியாற்றிய இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாயமான இரு பெண்களை தேடும் பணி தொடர்கிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல்? – அடுத்தக்கட்ட சோதனையா?