1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (01:35 IST)

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென்று உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு திண்ண ஆசைய, லத்திகா  உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பவர ஸ்டார் சீனிவாசன்.

இவர் இன்று திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கபட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இவர் கடந்த மாதம் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.