திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (08:32 IST)

இப்போதைக்கு இந்த தடுப்பூசி வேணாம்! – இந்தோனேஷியாவுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி!

சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை இந்தோனேஷியா அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பெருமளவில் அவசரகால பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் சீரம் நிறுவனம் அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நோவாவாக்ஸ் என்ற தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்துள்ளது. எனினும் இந்த தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த தடுப்பூசிகள் டிசம்பரில் காலாவதி ஆகும் என்பதால் அதற்கு இந்த ஒரு கோடி டோஸையும் இந்தோனேஷியாவுக்கு ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனம் அனுமதி கேட்ட நிலையில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.