1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. shoba chandrasekar talk about her son vijay

விஜய் பேசமாட்டார்!.. செஞ்சி காட்டுவார்!.. ஷோபா சந்திரசேகர் கொடுத்த பேட்டி!..

shoba vijay
shoba vijay

நடிகராக இருந்து தற்போது அரசியலுக்கு வந்திருப்பவர் ஜோசப் விஜய். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டி தற்போது தமிழகத்தின் முதல்வராக மாறியிருக்கிறார்.

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவரின் தவெக அரசை அதிமுக, திமுக கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட சில பிரச்சனைகளை அவர்கள் எழுப்பி வருகிறார்கள். சட்டசபையிலும் இது எதிரொலித்து வருகிறது. ஆனால், இதற்கெல்லாம் விஜய் பதில் சொல்வதே இல்லை. அவருக்கு பதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் போன்றவர்கள்தான் பதில் சொல்கிறார்கள்.

பொதுவாக முதல்வர் ஜோசப் விஜய் அதிகம் பேசாதவர்.. தனிமை விரும்பி என்று பலருக்கும் தெரியும்.. இந்நிலையில்தான் ஒரு தொலைக்காட்சி நடத்திய சிங்க பெண்ணின் தங்க மகன் என்கிற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜோசப் விஜயின் தாய் சோபா சுந்திரசேகர் ‘விஜய் எப்பொழுதும் அமைதியாக இருப்பார்.. அதிகம் பேச மாட்டார்..

குடும்பத்தோடு வெளிநாடு சென்றால் கூட அவர்களை ஷாப்பிங் அனுப்பிவிட்டு இவர் தனியாக அறையில் இருப்பார்.. அதுதான் அவரின் சுபாவம்.. அதே போல் தன்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் விஜய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.. வாக்குவாதம் செய்வது வீண்.. விவாதங்களில் ஈடுபடுவதும் அவருக்கு பிடிக்காது.. எதுவாக இருந்தாலும் பேச்சில் அல்ல.. செயலில்தான் காட்ட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பார்’ என சொல்லியிருக்கிறார்.

2023ம் வருடம் அரசியலுக்கு வருவதாக விஜய் எங்களிடம் சொன்ன போது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.. நடிகராக இருப்பது வேறு.. அரசியல் வேறு என்பதால்தான் நன்றாக யோசிக்க சொன்னோம்.. ஆனால் ‘அம்மா நான் முடிவு பண்ணிட்டேன்’ என்ற உறுதியாக சொல்லிவிட்டார். அதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசவில்லை. விஜய் காமராஜர் மாதிரி வரணும்னு ஆசைப்படுகிறார்.. அவர் வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறேன்’ என சோபா சுந்தர் சேகர் கூறியிருக்கிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு - மருத்துவர்களை சிறைபிடித்து சரமாறியாக அடித்த உறவினர்கள்..