1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jason sanjay comment about his father cm vijay

அப்பா முதல்வரானது எங்களுக்கு பெரிய பொறுப்பு!.. ஜேசன் சஞ்சய் ஓப்பன்...

jason sanjay
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 20266 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகிவிட்டார். தமிழக அரசியலில் ஒரு புதிய புரட்சியை மலர்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் கடந்த 50 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சியில் ஏதேனும் ஒன்றுதான் மாறி மாறி ஆட்சி அமைத்துவந்திருக்கிறது. தற்போது எந்தக் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்ட தவெக ஆட்சியை பிடித்திருக்கிறது..

இந்நிலையில் முதலமைச்சர் விஜயின் மகன் ஜோசப் சஞ்சய் ஊடகம் ஒன்றில் பேசியபோது தனது அப்பா முதல்வர் ஆனது பற்றி கருத்து தெரிவித்தார். அப்போது ‘அப்பா முதல்வரானது எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் மிகப்பெரிய பொறுப்பு.. கௌரவம்.. அதே நேரம் நாங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. அறிவுரையை பொறுத்தவரை அவர் எனக்கு கொடுத்த அறிவுரை எனக்கு எப்போதும் மிகவும் பிடிக்கும்.. ‘ நீ உனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார்’ என ஜோசப் விஜய் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நாங்க அவ்ளோ சொல்லியும் கேட்கல!.. மொக்கை வாங்கிட்டார் விஜய்!.. ஸ்டாலின் நக்கல்!..