இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு!.. காவல்துறை தலைவர் பூஜித்துக்கு மரண தண்டனை!..
2019ம் வருடம் ஏப்ரல் 21ம் தேதி இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டு வெடிப்பில் 279 பேர் உயிரிழந்தனர். ஒரு தேவாலயத்தில் மக்கள் கடவுளை தொழுது கொண்டிருந்த போது ஒரு நபர் நடத்திய தற்கொலை தாக்குதல் இது. இந்த சம்பவம் உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இலங்கையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படலாம் என இந்திய உளவுத்துறை பலமுறை எச்சரிக்கும் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் பூஜித் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என அப்போது சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இலங்கையில் முன்னாள் காவல்துறை தலைவர் பூஜித் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை புறக்கணித்ததே இதற்கு காரணம் என விசாரணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை கொடுத்திருக்கிறது.
அதேநேரம் இலங்கையில் மரண தண்டனைக்கு தடை அமலில் இருப்பதால் நடைமுறையில் இது ஆயுள் தண்டனாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..