செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன? நீர் திறக்கப்படுமா??
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் பல நகரங்கள் மழை வெள்ளம் சூழந்து காணப்படுகின்றன. இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
ஆம், சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 21.13 அடியாக உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியில் 21.13 அடிக்கு தண்ணீர் உள்ளது. இன்று மாலைக்குள் நீர்மட்டம் 22 அடியை எட்டினால், மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும். ஆனால் இப்போது 2015 நடந்தது போல அதிகளவு மழை பெய்யவில்லை எனவே பயப்பட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.