வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:12 IST)

கூட்டணில பிரச்சினை வராம இருக்கது அதிமுக கையில இருக்கு! – கே.டி.ராகவன் மறைமுக எச்சரிக்கை!

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் கூட்டணியில் நீடிப்பது குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில் அதிமுகவின் நாளேட்டில் ”சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுப்படுத்துகிற உள்நோக்கம் கொண்ட யாத்திரைகளை தமிழகம்  அனுமதிக்காது” என்று கூறப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வேல் யாத்திரையில் தமிழக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பாஜக மாநில பொதுசெயலாளர் கே.டி.ராகவன் குற்றம் சாட்டியுள்ளார். மற்ற அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்கும் தமிழக அரசு பாஜக வேல் யாத்திரையை தடை செய்வது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வேல் யாத்திரைக்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரச்சினை ஏதுமில்லாமல் கூட்டணியை கொண்டு செல்ல நினைக்கிறோம். ஆனால் அது அதிமுக கையில்தான் உள்ளது என கூறியுள்ளார்.