1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sembarabakkam lake gets filled Adayar river gets flood warning

நிரம்பும் செம்பரம்பாக்கம்; அடையாற்றில் வெள்ளம்? கண்முன் வந்து போகும் 2015 நிகழ்வுகள் !!

அடையாறு
அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக முன்னெசரிக்கை விடப்பட்டுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் பல நகரங்கள் மழை வெள்ளம் சூழந்து காணப்படுகின்றன. இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
 
ஆம், சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 21.13 அடியாக உள்ளது. 
 
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியில் 21.13 அடிக்கு தண்ணீர் உள்ளது. இன்று மாலைக்குள் நீர்மட்டம் 22 அடியை எட்டினால், மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. 
அதோடு எந்த நேரத்திலும் உபரிநீர் திறந்துவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அம்பத்தூர் காவல் துணை ஆணையருக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை கடிதமும் எழுதியுள்ளது.
 
சென்ற 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முக்கிய காரணம் செம்பரம்பாக்கம் ஏரி. அந்த ஏரியில் நீர் இருப்பு அதிகம் ஆகி அந்த நீர் மொத்தமாக திறந்து விடப்பட்டு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது   செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்தும் அடையார் ஆற்றின் வழியாகத்தான் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
83 லட்சத்தை நெருங்கிய குணமடைந்தோர் எண்ணிக்கை! – இந்திய கொரோனா நிலவரம்!