தொடர்புடைய செய்திகள்
- திமுகவோடு கூட்டணிக்கு ரகசிய பேச்சுவார்த்தையா? – வெளிப்படையாக சொன்ன கமல்!
- அடுத்தடுத்து நடக்கும் ரெய்டு; கொத்தாய் சிக்கும் தொழிலதிபர்கள்! – கலக்கத்தில் முக்கிய புள்ளிகள்!
- திமுகவை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!- ட்ரெண்டிங்கில் #வாடகைஇங்கே_மூலபத்திரம்எங்கே
- நோ கேம்.. ஒன்லி ஆன்லைன் க்ளாஸ்; வீட்டை விட்டு ஓடிய சிறுவர்கள்! – பெற்றோரிடம் ஒப்படைப்பு!
- இதை விட அது காஸ்ட்லியா இருக்கே! பைக்கை மாற்றிக் கொண்ட திருடர்கள்!
கமல் பேசுறது அவருக்கும் புரியல.. யாருக்கும் புரியல! – செல்லூரார் கலாய்!
எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட கமல்ஹாசன் முயல்வதாக அதிமுகவினர் கூறி வரும் நிலையில் கமல் பேசுவதே புரிவதில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் தன்னை எம்.ஜி.ஆரோடு தொடர்புபடுத்தி பேசி வந்தார். இதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் எழுந்தது. எம்ஜிஆர் விரும்பிய நல்லாட்சியை அதிமுக நடத்தி வருவதாகவும், கமல் வாக்குகளுக்காக எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவதாகவும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ “கமல்ஹாசனை மக்கள் நடிகராகவே பார்க்கின்றனர். இன்னும் அவரை அரசியல் கட்சி தலைவராக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவர் பேசுவது என்னவென்று அவருக்கும் புரியவில்லை, மக்களுக்கும் புரிவதில்லை” என கிண்டலாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
