ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (10:56 IST)

அடுத்தடுத்து நடக்கும் ரெய்டு; கொத்தாய் சிக்கும் தொழிலதிபர்கள்! – கலக்கத்தில் முக்கிய புள்ளிகள்!

தமிழகத்தில் சமீப காலமாக நடந்து வரும் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் வருமானவரி துறை ரெய்டில் பலர் சிக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அதிகாரிகள் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்தி வரும் சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்றொருபக்கம் வருமான வரித்துறை நடத்தும் சோதனையில் தொழிலதிபர்களும் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான பகுதிகளில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் குறித்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஈரோட்டில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தில் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் ஊழல், லஞ்ச புகார்களில் சிக்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தலாம் என்பதால் முக்கிய தொழில் புள்ளிகள் கலக்கத்தில் உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.