தொடர்புடைய செய்திகள்
- அத்துமீறி கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் நுழைந்த அண்ணாமலை?? – போலீஸார் வழக்குப்பதிவு!
- பில்கிஸ் பானோ வழக்கு: குற்றவாளிகள் 11 பேர்களில் 9 பேர் தலைமறைவா?
- உலக முதலீட்டாளர் மாநாட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு.. தாமாக முன்வந்து வழக்கா?
- முரசொலி நிலம் வழக்கு.! ஆணையம் விசாரிக்க உத்தரவு.!! உயர் நீதிமன்றம் தீர்ப்பு.!!!
- ரயில்வே வேலைக்கு நிலம்.! லாலுவின் மனைவி, மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை தமிழ்நாடு அரசு செய்கிறது: செல்லூர் ராஜூ
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது அவதூறு வழக்கு தமிழ்நாடு அரசு பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஜூஜூபி என்றும் பழைய தகரத்திற்கு பாலிஷ் போடும் வேலையை தான் தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது என்றும் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் தமிழக அரசை கண்டித்து கடந்த மே மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணை நடந்த நிலையில் செல்லூர் ராஜு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: அவதூறு வழக்கு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை, திமுக ஆட்சிகாலத்தில் தொடர்ந்த கொலை வழக்கிலேயே விடுதலை பெற்ற எனக்கு, இதுபோன்ற வழக்குகள் எல்லாம் ஜீஜீபி.
நான் ஆர்ப்பாட்டத்தில் பேசியதை தான் தமிழ்நாட்டு மக்கள் நாள்தோறும் பேசுகிறார்கள். ஆனால் அவதூறு வழக்கு என்மீது போடுப்படுகிறது, பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை தான் தமிழ்நாடு அரசு செய்கிறது என மதுரையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
