1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jawaharullah says about edappadi palanisamy

சிறுபான்மை மக்களின் நலன்கள் குறித்து ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம்: ஜவஹருல்லா

மனிதநேய மக்கள் கட்சி
சிறுபான்மை மக்களின் நலன்கள் குறித்து ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம் என நாகையில், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவஹருல்லா  பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
 
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பயணித்தால் நாடாளுமன்றம் செல்லலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டு வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களின் நலன்களை பற்றி கூறும் வார்த்தைகளில் உண்மை துளியும் இருந்ததில்லை.

 
40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். 
 
பாஜகவுக்கு எந்தவிதமான கொள்கைகளும் கோட்பாடுகளும் இல்லை, தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை, பாஜகவின் கோட்பாடுகள் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரை செல்லக்கூடிய இடங்களில் மக்கள் எதிர்ப்பு அலை பலமாக வீசுகிறது என அவர் மேலும் பேசினார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை தமிழ்நாடு அரசு செய்கிறது: செல்லூர் ராஜூ