ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (16:17 IST)

பில்கிஸ் பானோ வழக்கு: குற்றவாளிகள் 11 பேர்களில் 9 பேர் தலைமறைவா?

Bilkis Bano
பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரணடைய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அவர்களில் 9 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
 
பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரணடைய உச்ச நீதிமன்றம் கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, 11 பேரும் 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 
 
இந்நிலையில், 11 பேரில் 9 பேரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்ட எஸ்.பி.  தெரிவித்துள்ளார். தலைமறைவான 9 பேரையும் தேடி  வருவதாகவும்,  அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இந்த வழக்கில் குற்றவாளிகளான மிதேஷ் பட் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் ஏற்கனவே சிறையில் சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,
 
Edited by Mahendran