தொடர்புடைய செய்திகள்
- அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! ஊடகங்களிடம் காமெடி செய்த செல்லூர் ராஜூ
- வெளுத்து வாங்கிய எடப்பாடி ; தெறித்து ஓடிய செல்லூர் ராஜூ
- ஜெ. கைரேகை வழக்கு; தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் விளக்கம்
- மதுசூதனனின் ஒப்புதலின் பேரில் ஜெ.வின் கைரேகை ஏற்கப்பட்டது - முதன்மை செயலாளர் விளக்கம்
- செல்லூர் ராஜுவுக்கு நோபல் பரிசு - ராமதாஸ் கிண்டல்
என்னை வைத்து லந்து செய்கிறீர்கள்: ஓட்டம் பிடித்த செல்லூர் ராஜூ
அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர்களை கண்டதும் என்னை வைத்து லந்து செய்கிறீர்கள் எனக் கூறி ஓட்டம் பிடித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அமைச்சர்களின் பேச்சும், செயல்பாடுகளும் படுபயங்கரமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ, தெர்மோகோல் விவகாரம்,மாட்டு சாணி விவகாரம் உள்பட பல விஷயங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறார். இவரது தெர்மகோல் சம்பவம் வலைதளங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களாலும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு அவரை தெர்மகோல் ராஜூ என்றே அழைக்கின்றனர்.
இந்நிலையில் மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் பத்திரிக்கையாளர்கள் மைக்குடன் சென்றனர், இதனைக் கண்ட அவர் என்னை வைத்து லந்து செய்கிறீர்கள் என்ற நகைச்சுவையாக கூறிவிட்டு அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்
அடுத்த கட்டுரையில்
