1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (12:38 IST)

'மெர்சலுக்கு மீண்டும் சிக்கலா? சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் பல தடைகளை தாண்டி ஒருவழியாக இன்று காலைதான் சென்சார் சான்றிதழே கிடைத்துள்ளது. எனவே இந்த படம் நாளை வெளியாவது 100% உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்து மக்கள் கட்சியினர் திடீரென 'மெர்சல்' படம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.



 
 
மெர்சல்' படத்திற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிக விலையில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.
 
இந்த புகார் மீது சென்னை போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் மெர்சலுக்கு மீண்டும் பிரச்சனை ஏற்படுமோ என்ற அச்சம் விஜய் ரசிகர்களிடையே நிலவி வருவதாக கூறப்படுகிறது., மேலும் 'மெர்சல்' டிக்கெட்டுக்கள் ரூ.1200 விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.