செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (14:45 IST)

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! ஊடகங்களிடம் காமெடி செய்த செல்லூர் ராஜூ

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அமைச்சர்களின் பேச்சும், செயல்பாடுகளும் படுபயங்கரமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ, தெர்மோகோல் விவகாரம் உள்பட பல விஷயங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறார்



 
 
இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் 'எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை மோசமாக விமர்சனம் செய்து வருகிறதே, அதற்கு உங்கள் பதில் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை விமர்சனம் செய்வது சகஜம் தான். விமர்சனம் செய்யாமல் எங்களை புகழவா செய்வார்கள்? இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா, இதெல்லாம் ஒரு கேள்வி என்று ஊடகங்கள் கேட்கின்றீர்களே என்று சிரிப்புடன் பதில் கூறினார்.
 
அமைச்சரின் இந்த பதிலால் அவரை சுற்றி இருந்தவர்கள் மட்டுமின்றி செய்தியாளர்களும் சிரித்ததால் அந்த இடமே சற்று நேரம் கலகலப்பாகியது.