ஜெ. கைரேகை வழக்கு; தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் விளக்கம்
அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கி தருமாறு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த கடிதத்தில், அவரது கைரேகையை பதிவு செய்த மருத்துவர் பாலாஜி வரும் 27-ந் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டது தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் வில்ஃப்ரெட், உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அளித்த கடிதத்தின் பேரில் சின்னம் ஒதுக்கீடு செயயப்பட்டதாக தெரிவித்தார். இவரது கருத்தை பதிவு செய்த நீதிமன்றம் வரும் 27ஆம் தேதி, இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்த டாக்டர் பாலாஜி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.