தொடர்புடைய செய்திகள்
- 7 பேர் விடுதலை விவகாரம்; முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சீமான்!
- The Family Man - Season 2 விமர்சனம்: எப்படியிருக்கிறது சர்ச்சைகளுக்கு இடையே வெளியான அமெஸான் தொடர்?
- கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்; தனியார் மருத்துவமனைக்கு தடை! – கோவையில் அதிரடி!
- நிதி ஆயோக் வளர்ச்சி குறியீடு; தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்??
- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வுகள் அறிவிப்பா? – இன்று முதல்வர் ஆலோசனை!
போடான்னு சொல்லிட்டு போயிட்டே இருப்போம்! – ஃபேமிலிமேன் தொடர் குறித்து சீமான் கருத்து!
சர்ச்சைக்குரிய ஃபேமிலிமேன் தொடர் ஓடிடியில் வெளியான நிலையில் அதுகுறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈழ தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சைக்குள்ளான ஃபேமிலிமேன் தொடர் நேற்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. முன்னதாக இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் கூறி வந்த நிலையில், அதில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு எதிராக எதுவும் இல்லை என்றும், தொடர் வெளியானதும் பார்த்துவிட்டு தமிழ் அமைப்புகளே பாராட்டும் என்றும் அதன் இயக்குனர்கள் அறிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஃபேமிலிமேன் தொடர் குறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “அந்த தொடரில் ஐஎஸ் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் ஈழ போராளிகளை தொடர்பு படுத்தி காட்சியமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி பட்டேன். ஆப்ரகாம் லிங்கன் சொல்வது போன்று குற்றம் குறை கூறுபவர்களை புறந்தள்ள கற்றுக்கொள்ங்கிற மாதிரி “போடா என சொல்லிட்டு போய்விடுவோம்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
