நிதி ஆயோக் வளர்ச்சி குறியீடு; தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்??
மத்திய அரசின் நிதி ஆயோக் வளர்ச்சியடைந்து வரும் மாநிலங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய மாநிலங்களில் சமூகவியல், சுகாதாரம், பொருளாதார, சுற்றுசூழல் உள்ளிட்ட 16 காரணிகளின் வளர்ச்சி குறித்து மத்திய அரசின் நிதி ஆயோக் கண்காணித்து வருவதுடன் அதில் முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்களை தரவரிசை படுத்தியும் வருகிறது.
அவ்வாறாக நிதி ஆயோக் தற்போது வெளியிட்டுள்ள மாநிலங்களுக்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கேரளா உள்ளது. கடைசி இடத்தில் பீகார் உள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.