செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (11:23 IST)

7 பேர் விடுதலை விவகாரம்; முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சீமான்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நிதி வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதன்படி அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளனர். மேலும் இந்த சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எழுவர் விடுதலை குறித்து சீமான் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில் முதன்முறையாக சீமான் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.