முதல் பரிசு ரூ.50 லட்சம்.. ஆறுதல் பரிசும் உண்டு! – கிராம நிர்வாகங்களுக்கு கொரோனா தடுப்பு போட்டி!
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால் கொரோனாவை குறைக்கும் கிராமங்களுக்கு பணப்பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து மாநிலங்கள் முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இரண்டாவது அலையில் கிராமங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிராமங்களில் முறையாக சுகாதார வசதி இல்லாத நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் கிராமங்களுக்கு முதல் பரிசாக ரூ.50 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.25 லட்சமும் மற்றும் சில ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுகள் பணமாக அல்லாமல் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்படும் என்றும், இந்த போட்டியில் 22 வரைமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.