1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seeman says about naam tamilar party broken

நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சியை உடைக்கவிடமாட்டேன்: சீமான்

நாம் தமிழர்
நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சியை உடைக்கவிடமாட்டேன் என  சீமான் பேட்டியளித்துள்ளார்.
 
கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் மாநகர்,  அஸ்தம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில், அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிற்காக சேலம் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.
 
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ஆதாரம் இல்லாமல் நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துகிறார்கள். என்ஐஏ சோதனைக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டோம்
 
நாம் தமிழர் கட்சியை ஒரு போதும் உடைக்க முடியாது, நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சிய உடைக்கவிடமாட்டேன் என ஆவேசமாக தெரிவித்தார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran