1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seeman said vijay has to say sorry

விஜய் ஒரு Sorry சொன்னா போதும்!. எல்லாம் முடிந்துவிடும்!.. சீமான் பேட்டி!..

seeman
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்றபோது அவரைக் காண பல ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். விஜய் பேசிக்கொண்டிருந்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலில் பலரும் சிக்கி மயக்கமடைந்தனர்.
அந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போதே விஜய் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அவர் திருச்சி விமான நிலையத்தை அடைந்தபோது 35 பேர் பலியானதாக செய்திகள் வெளியானது.. இதை சொல்லி பத்திரிக்கையாளர் ஒருவர் விஜியின் கருத்தை கேட்க முயற்சி செய்தார்.. ஆனால் விஜய் காதில் வாங்கி கொள்ளாத போல சென்று விட்டார்.. இறுதியாக 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது..

ஆனால் அதைப்பற்றி விஜய் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.. அந்த சம்பவம் நடந்து 2 நாட்கள் கழித்து வீடியோ போட்டார். அதிலும், அவருக்கும், அந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லாதது போல காட்டிக்கொண்டார். அதேபோல் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தை கூட நேரில் சென்று சந்தித்து அவர் ஆறுதல் சொல்லவில்லை..

சில மாதங்கள் கழித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் சொன்னார். இந்நிலையில், இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சீமான் ‘விஜய் கரூருக்கு போகவில்லை என்றால் கூட்டம் இல்லை.. கூட்டம் இல்லைன்னா நெரிசல் இல்லை.. நெரிசல் இல்லனா சாவு இல்லை.. அப்ப முதன்மை காரணி யாரு?.. அவர்தான்.. தெரியாமல் நடந்துவிட்டது.. அதுக்கு நானும் ஒரு பொறுப்பாயிட்டேன் என மக்களிடம் ஒரு வார்த்தை தெரிவித்தால் முடிந்துவிடும்’
என்று சொல்லியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
கமல் சார் என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டார்!!. அவரை மறக்கமாட்டேன்!.. வடிவேலு ஃபீலிங்...