1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2026 (14:42 IST)

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

vijay
நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் திரிஷாவுடன் நேற்று தயாரிப்பாளர் ஏஜிஎஸ் குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்டதுதான் நேற்று இரவு முதலே பேசுபொருளாக மாறியிருக்கிறது.ஏனெனில் விஜய்க்கும், திரிஷாவுக்கும் தொடர்பு என அரசல் புரசலாக குருசலாக செய்திகள் வெளியாகி வந்தது.. ஒருபக்கம் விஜய் நீலாங்கரையில் உள்ள வீட்டில் தனியாகத்தான் வசித்து வருகிறார், அவரின் மனைவி பிள்ளைகள் அவருடன் வசிக்கவில்லை என்றும் சொன்னார்கள்..

இநிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு விஜயின் மனைவி சங்கீதா விஜயிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. அதோடு விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.எனவே பலரும் விஜயை விமர்சிக்க தூங்கினார்கள்.. விஜயின் தீவிர விசுவாசிகள் சங்கீதாவை திட்ட துவங்கினார்கள்.. இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில்தான் நேற்று திரிஷாவை அழைத்துக் கொண்டு கல்யாணத்துக்கு போயிருக்கிறார் விஜய்.. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது எக்ஸ் தளத்தில் ‘நேர்மையான மற்றும் மரியாதையான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய பொறுப்பை புறக்கணித்தால் மக்களிடம் மரியாதையை இழப்பது நிச்சயம்.. லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டவராக இருக்கும் நிலையில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது’ என பதிவிட்டிருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் தனஞ்செயனின் மகள் திருமணத்திலும் விஜய் கலந்து கொண்டார். ஆனால், அப்போது விஜய் தனியாக கலந்துகொண்டார். அது தொடர்பான புகைப்படங்களை அப்போது வெளியானது குறிப்பிடப்பட்டது...