தொடர்புடைய செய்திகள்
- பாஜகவின் ஒரு கோடி பரிசு போஸ்டர்: திட்டி விட்ட சீமான்!!
- மகளிர் உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா
- 70 லட்சம் பேர்லாம் முடியாது! ஒரு லட்சம் பேர் ஏற்பாடு பண்றோம் – ட்ரம்புக்கு ஏமாற்றம்!
- சுமாராக ஆடிய இந்தியா: குறுக்கே புகுந்த மழை!
- என்ன, பூச்சாண்டி காட்டிறீங்களா? அவ காளின்னா.. நான் அவளுக்கு ஆத்தா – பொங்கிய விஜயலட்சுமி !
குடிசைய மறைக்க 7 அடிக்கு சுவர்: மோடி மீது காண்டில் சீமான்!!
குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தால் அது ஆக்கபூர்வமான செயலாக இருந்திருக்கும் என மத்திய அரசை விமர்சித்துள்ளார் சீமான்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வர இருக்கிறார். பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியா வரும் ட்ரம்ப் குஜராத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை 25 ஆம் தேதி காண செல்கிறார்.
டிரம்ப் விமான நிலையத்திலிருந்து படேல் மைதானத்துக்குச் செல்லும் வழிகளில் 500 குடிசை வீடுகள் உள்ளன. எனவே இதை மறைக்கும் வகையில், பெரிய பெரிய சுவர்களைக் கட்டும் பணியில் அகமதாபாத் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. 7 அடி உயரத்தில் அரை கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் கூறியதாவது, டிரம்ப் வருகையின்போது குடிசைகள் தெரிந்துவிடக்கூடாது என்று ஏழு அடி சுவர் எழுப்பி அதனை மறைக்க முயற்சி எடுத்து வருகின்றனர்
ஆனால், அந்த செங்கலை கொண்டு குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தால் அது ஆக்கபூர்வமான செயலாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
