புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (09:20 IST)

என்ன, பூச்சாண்டி காட்டிறீங்களா? அவ காளின்னா.. நான் அவளுக்கு ஆத்தா – பொங்கிய விஜயலட்சுமி !

விஜயலட்சுமி மற்றும் சீமான்

சீமானுக்கு ஆதரவாக பேசிய நாம் தமிழர் காளியம்மாளைக் கடுமையாக விமர்சிக்கும் விதமாக விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ப்ரண்ட்ஸ், பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் ஒங்கிணைப்பாளர் சீமான் மீது, பல புகார்களை எடுத்து கூறியுள்ளார். அதேசமயம், சமீபத்தில் இரு வீடியோக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இன்று, மூன்றாவதாக ஒரு வீடியோ, வெளியிட்டுள்ளார். தில், சீமான் பாலியல் புகார் தெரிவித்ததால் தன்னைக் கொலை முயற்சிகள் நடந்து வருவதாக அதிகம் தப்பி பிழைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், சீமானின் தம்பிகளை  மவுத் பீஸ் என  விமர்சித்தார் விஜயலட்சுமி.  மேலும், சீமான் தனது ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டி வருவதை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டு எனது சாவுக்கு காரணம் சீமான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்வேன் விஜயலட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில்  சீமானுக்கு ஆதரவாக காளியம்மாள் விஜயலட்சுமியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில் ‘நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு வெளியே வராத.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விபச்சாரத்துக்குப் போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்... ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன். இனி எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறது வேற.. எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்.. என்னா பேச்சு இது?’ எனக் கூறியுள்ளார்.

அதையடுத்து சூட்டோடு சூடாக காளியம்மாளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக விஜயலட்சுமி. வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்  ‘காளியம்மாள் எல்லாம் எனக்கு செருப்பு.. இந்த மாதிரி எத்தனை செருப்பை நான் மிதிச்சிட்டு, போட்டுட்டு போகணும்னு தெரிஞ்சுதானே வந்திருப்பேன்.. என்ன, பூச்சாண்டி காட்டிறீங்களா? காளியம்மாள் எல்லாம் பேசவேக்கூடாது, அவ காளின்னா, நான் அவளுக்கு ஆத்தா.. எனக்கு இந்த மாதிரி சில்லறை ஆட்களோட கலாட்டா தேவையில்லை.. நிறுத்திக்குங்க எல்லாத்தையும்.’ என ஆவேசமாகப் பேசியுள்ளார்.