வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (14:04 IST)

மகளிர் உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா

மகளிர் உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்ளும் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
 
இன்றைய முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத 
 
உள்ளன. இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனையடுத்து இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் வெர்மா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இந்திய அணி சற்றுமுன் வரை 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.
 
இன்றைய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, வெர்மா, ரோட்ரிகஸ், கவுர், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே, தான்யா பாட்டியா, அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் உள்ளனர். அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி, கார்டனர், லானிங், எல்லிஸ் பெர்ரி, ஹென்ஸ், சுதர்லாண்ட், ஜெஸ் ஜோனசென், கிம்மின்ஸி, ஸ்ட்ரெனோ மற்றும் மெகன்  ஆகியோர் உள்ளனர்.