1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools will function tomorrow in Chennai and Kanchipuram

சென்னை, காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்!

Schools
காஞ்சிபுரத்தில் நாளை அனைத்து பள்ளிகள் செயல்படும் என்று மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக சில  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மழை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (28)  பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மனைவியுடன் தகராறு... 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை