1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (15:32 IST)

சென்னை பல்கலையில் பிபிசி ஆவணப்படம் திரையிட தடை: அதிரடி அறிவிப்பு!

Madras University
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் பிரிவு ஒன்று பிபிசி ஆவண திரைப்படத்தை திரையிட முயற்சி செய்தபோது அந்த திரைப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. 
 
குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தை தொடர்ந்து எதிர்ப்பு ஆதரவும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநில கல்லூரியில் பிபிசி ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது 
 
இதனை அடுத்து சென்னை பல்கலைக்கழகத்திலும் பிவிசி ஆவணப்படம் திரையிட மாணவர்களின் ஒரு பிரிவு முடிவு செய்தனர். இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பு சார்பில் ஆவணப்படத்தை திரையிட முயற்சித்த  நிலையில் சென்னை பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran