1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools should not be cleaned by students - School Education Department

பள்ளியை மாணவர்களை வைத்து தூய்மை படுத்தக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை

Schools
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இன்று பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், பள்ளியில் மரங்கள் இருந்தால் அதில் இருந்து உதிரும் இலைகளால் குப்பை  உண்டாகிறது. மழைக்காலங்களில் இக்குப்பைகள் மழையில் நனைந்து கட்டிட உறுதிக்கு பாதிப்பு ஏற்பத்தும் வகையிலுள்ளது.  அதனால், இலைகளையும் சருகுகளையும் அகற்ற வேண்டும்.  தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தைச்  சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களை  இந்தச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.  இதற்கு உள்ளூர் மக்கள் அல்லதிஉ, 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிபவர்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

பள்ளியில் அறிவிப்புப் பலகையில்  நடமாடும் மருத்துவக்குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செல்வியர்களின் தொலைபேசி எண்களையும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐஐடி மாணவி !