திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (08:18 IST)

இன்றுமுதல் ஆன்லைனில் மட்டுமே வருகைப்பதிவு! – அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப்பதிவை இனி ஆன்லைனில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப்பதிவை இனி நோட்டுகளில் மேற்கொள்ளக்கூடாது என்றும், கல்வித்துறையின் TNSED என்ற செயலியில் மட்டுமே வருகைப்பதிவை பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விடுப்பு, தற்செயல் விடுப்பு, முன் அனுமதி, மருத்துவ விடுப்பு உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று ஆகஸ்டு 1 முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.