1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Schools in Thoothukudi leave because of rain

கனமழை எதிரொலி: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை
கடந்த 1ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் ஒருசில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

நேற்று கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்
 
இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கால் கை இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் - விசாரணையை முடுக்கிய பிரான்ஸ்