புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (15:51 IST)

சிதைந்த பள்ளியை சீரமைத்த லாரன்ஸ் - திறப்பு ஓவியா

வறுமை கோட்டிற்கு கீழே மற்றும் பின்தங்கிய மாணவ, மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாக உள்ள இடம் அரசாங்க பள்ளிகள் தான்.
 
ஆனால் அந்த பள்ளிகள் தற்போது சீரான பராமரிப்பின்றி பாழடைந்துள்ளதால் அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாண மாணவிகள் தங்களின் சொந்த செலவில் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் பெரும் உதவியாக இருக்கும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
இந்நிலையில் நடிகர்  ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். பழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளை சீரமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி கொடுத்திருக்கிறார்.
 
செஞ்சி அருகிலுள்ள மேல்மலையனூர் பக்கத்தில் அரசாங்க பள்ளிக்கு கழிப்பிடம் மற்றும் சிதைந்த பகுதிகளை புதுப்பித்து வர்ணம் அடித்து புது கட்டிடம் போல் மாற்றி அமைத்துளார்  .  பிறந்த நாளான அக்டோபர் 29ம் தேதி அந்த பள்ளியின் திறப்பு விழா என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.
 
ஆனால் இன்று லாரன்ஸின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால் லாரன்ஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அதானல் வருத்தம் தெரிவித்த அவர் நடிகை ஓவியா பள்ளி திறப்பு விழாவில் பங்கேற்று மாலை 4 மணிக்கு கலந்து கொள்ளவுள்ளார்  என லாரன்ஸ் தெரிவித்தார்.