வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (16:15 IST)

பகீர்...! தோழிகளை கொன்று ரத்தத்தைக் குடிக்க முயன்ற மாணவிகள்...

அமெரிக்காவில்  உள்ள புளோரிடா மாகாணத்தில்  இயங்கி வரும் பார்டோ மிடில் பள்ளியைஅ சேர்ந்த இரண்டு மாணவிகள் தங்கள் பள்ளியில் இருந்த கழிப்பிடத்தில் மணிக்கணக்காக கத்திருந்து தன் சக மாணவிகளைக் கொல்ல திட்டமிட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் சதிச்செயல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணிவிகள் இருவரும் சாத்தான் சம்பந்தமான புத்தங்கள் படிப்பதும் , பேய் படங்கள் பார்ப்பதுமாக தங்களின் ஓய்வு நாட்களை கழித்து வந்திருக்கின்றனர்.
 
இந்நிலையில் இவர்களுக்கு மனிதர்களின் ரத்தம் குடிக்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. எனவே அதற்கு இந்த இரு மாணவிகளும் தம் பள்ளியில் படிக்கும் தங்களை விட வயதில் குறைந்த சிறுமிகளைக் கொன்று அவர்களின் குருதியை குடிப்பதற்கு திட்டமிட்டு வந்திருக்கின்றனர்.
 
இதற்காக பள்ளியில் இடைவேளையின் போது வீட்டில் இருந்து எடுத்து வந்த கத்தியை  தங்கள் ஆடையில் மறைத்துவைத்து  கழிவறைக்கு சென்று அங்கு வரும் சிறுமியரைக்கொல்ல காத்திருக்கின்றனர்.
 
இந்த கொலை சதி குறித்து  பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்ததையடுத்து அவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தையடுத்து அவர்கள் விரைந்து வந்து மாணவிகள் இருவரையும் கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் உண்மைகள் வெளியானது:
கைதான பெண்கள் கூறியதாவது:
 
’சக மாணவிகளைக்கொன்று அவர்களின் ரத்தத்தை குடித்து, சதைகளையும் சாப்பிட எண்ணியிருந்தோம்.
 
இதற்காக இண்டர்னெட்டில் எப்படி கத்தியால் குத்தி கொலை செய்வது என்ற வீடீயோ மற்றும் செய்திகளைப்பார்த்து கற்றுக்கொண்டோம்.
 
அவர்களை கொன்ற பிறகு நாங்களும் எங்களைக் கத்தியால் குத்தி மாய்ந்த பிறகு சாத்தானை சந்திக்க திட்டமிட்டிருந்தோம் அதற்குள் இந்த சதி எப்படி வெளியானது என்று தெரியவில்லை நாங்களும் மாட்டிக்கொண்டோம்’ இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
 
கொலை செய்ய முயன்ற மாணவிகளைக் கைது செய்ய போலீஸார் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து மனநல ஆலோசனகள் வழங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்த சம்பவம் குறித்து ,மேலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். படிக்கும் இரு மாணவிகள்  பள்ளியிலேயே சக மாணவிகளைக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.