களேபரமாய் நடந்த திருநங்கையின் திருமணம்: ஆடிப்போன கோவில் ஊழியர்கள்
தூத்துக்குடியில் ரெயில்வே ஊழியர் ஒருவர் திருநங்கையை திருமணம் செய்துகொண்டார்.
தூத்துக்குடியை சேர்ந்த இன்ஜினீயரிங் பட்டதாரியான அருண்குமார் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும் திருநங்கையான ஸ்ரீஜாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஸ்ரீஜா தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.
இவர்களின் காதலுக்கு அருண்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் ஸ்ரீஜா மீது கொண்ட காதலால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய அருண்குமார் முடிவு செய்தார்.
அதன்படி நேற்று கோவிலில் வைத்து அருண்குமார், ஸ்ரீஜா திருமணம் செய்துகொள்ள முற்பட்டனர். ஆனால் கோவில் நிர்வாகிகள் சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும் என்றும் திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்றும் இவர்களின் திருமணத்தை நடத்த முடியாது என கூறிவிட்டனர். இதனால் அவர்களுடன் வந்த நண்பர்கள் கோவில் ஊழியர்களுடன் சண்டையிட்டனர்.
பின்னர் திருமண நேரம் முடியவிருந்ததால் பதிவு சான்றிதழ் பிரச்சனையை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்து, ஸ்ரீஜா கழுத்தில் அருண்குமார் தாலி கட்டினார். அவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.