1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. savukku shankar sentenced three year prision

சவுக்கு சங்கருக்கு 3 வருட சிறை தண்டனை!.. பெண் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!..

savukku shankar
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தவெக என பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகள் பற்றியும் விமர்சித்த வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். சவுக்கு மீடியா என்கிற youtube சேனலை இவர் நடத்தி வருகிறார்.

கடந்த திமுக ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் பற்றி இவர் நிறைய பேசியிருந்தார். இதையடுத்து அப்போதைய சென்னை மாநகர கமிஷனர் அருண் ஐ.பி.எஸ் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.அதேபோல் சவுக்கு சங்கரின் வீட்டில் சிலர் மலத்தை ஊற்றினார்கள். சவுக்கு சங்கர் சிறையில் இருந்த போது அவரின் தாயார் மரணமடைந்தார்..

தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதோடு அருண் ஐபிஎஸ் தற்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது தொடர்ந்து வீடியோ வெளியிடும் சவுக்கு சங்கர் தவெக அரசுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இந்நிலையில்தான், பெண் ஒருவர் தொடர்ந்து வழக்கில் சவுக்கு சங்கர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. எழும்பூர் கூடுதல் தலைமை நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதேநேரம் மேல்முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மதிமுக 2.0!.. வைகோ எதிர்கட்சி தலைவர்!.. ஆதவ் அர்ஜுனா பேச்சு!..