1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sathanur dan opened flood warning to people

சாத்தனூர் அணையில் 1000 கன அடி நீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

river
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆற்றின் கரையோரங்களில் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 117 அடியை நெருங்கிய நிலையில், மின் உற்பத்தி தடம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து தற்போது சாத்தனூர் அணையில் அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருவதை அடுத்து நீர்நிலைகள் அனைத்தும் மிக வேகமாக நிரம்பி வருகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சிறுபான்மையின மாணவனை தாக்கிய விவகாரம்: மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்